ANTARABANGSA

ஜாகர்த்தாவில் அமைதி திரும்பியது

ஜாகர்த்தா, மே 24-

இந்தோனேசிய பொதுத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் நடந்த கலவரங்களால் கோத்தா ஜாகர்த்தாவில் ஏற்பட்ட பதற்ற நிலை மாறி அங்கு வழக்க நிலை திரும்பியது. கலவரம் நிகழ்ந்த தானா அபாங் பகுதியில் நிலைகுத்திய பொது போக்குவரத்து, வர்த்தக மையங்கள் மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும், தேர்தல் கண்காணிப்பு கழகம் மற்றும் பொதுத் தேர்தல் ஆணையம் ஆகிய கட்டடங்கள் அமைந்துள்ள சாலைகள் பொது போக்குவரத்திற்கு இன்னும் திறக்கப்படவில்லை. காவல் துறையும் ராணுவமும் .அப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதே வேளையில், இந்தக் கலவரத்தில் மரணமடைந்தவர்கள் கலவரத்தைத் தூண்டி விட்டவர்களேயன்றி பொது மக்கள் அல்லர் என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று இந்தோனேசிய காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் அதன் பொது தொடர்பு பிரிவுத் தலைவர் எம்.இக்பால் தெரிவித்தார்.


Pengarang :