NATIONAL

தேர்தல் பிரச்சாரம்: அமைச்சர்களுக்கான தடையை நிலைநிறுத்துவீர் – பெர்சே 2.0 கோரிக்கை

ஷா ஆலம், மே 16-

அமைச்சர்களின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையை வரையறுக்கும்படி தேர்தல் ஆணையத்தை பெர்சே 2.0 எனும் தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல் ஒன்றியம் (அடில்) வலியுறுத்தியது.

அரசாங்க வளத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க அமைச்சர்கள் தங்கள் பணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்க காலம் கனிந்துவிட்டது என்று பெர்சே 2.0 தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது ஐக்கிய நாட்டு சபையின் 51/59 பொதுக் கூட்டத்தின் தீர்மானத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது என்றும் அவ்வறிக்கை கூறியது.

இந்திய பொதுத் தேர்தல் ஆணையமும் அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்கள் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்வதற்கும் அரசு அதிகாரிகளை பயன்படுததுவதற்கும் தடை விதித்துள்ளதை பெர்சே 2.0 சுட்டிக் காட்டியது.


Pengarang :