NATIONAL

நஜீப் – இர்வான் வழக்கு விசாரணை 2020 ஜனவரி 6இல் தொடங்கும்

கோலாலம்பூர், மே 14-

6.5 மில்லியன் வெள்ளி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் மற்றும் முன்னாள் கருவூல செயலாளர் டான்ஸ்ரீ முகமது இர்வான் செரிகார் ஆகியோர் மீதான வழக்கு 2020 ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 52 நாட்களுக்கு நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் தேதி நிர்ணயித்தது.

அரசாங்கத்தின் சார்பில் அரசு துணை வழக்கறிஞர் டத்தோ ஜாமில் அரிப்பினும் நஜீப்பின் சார்பில் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமது ஷாஃபி அப்துல்லா மற்றும் ஹார்விண்டர் சிங் மற்றும் முகமது இர்வான் சார்பில் வழக்கறிஞர் டத்தோ கே.குமரேதிரன் ஆகியோரும் கலந்து கொண்ட வழக்கு நிர்வாக கூட்டத்தில் நீதிபதி முகமட் நஸ்லான் முகமது கசாலி இந்த தேதியை நிர்ணயித்தார்.

ஜனவரி மாதத்தில் 6ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரையிலும், பின்னர் 20ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரையிலும் 27ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரையிலும் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதே போல், பிப்ரவரி மாதத்தில் 3ஆம் தேதி தொடங்கி 6ஆம் தேதி வரையிலும், பின்னர் 10 ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரையிலும் 17ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையிலும் 24ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரையிலும் விசாரணை நடைபெறும் என்று தேதி நிர்ணயிக்கப்பட்டது..


Pengarang :