SELANGOR

பாலின எழுத்தாற்றல் மீதான பயிற்சி பட்டறை -மகளிர் மேம்பாட்டு கழகம் ஏற்பாடு

ஷா ஆலம், மே 1:

இம்மாதம் நடைபெறும் பாலின எழுத்தாற்றல் மீதான பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும்படி பொது மக்களுக்கு மகளிர் மேம்பாட்டு கழகம் (ஐடபள்யூபி) வாய்ப்பு வழங்குகிறது.

இரு கட்டங்களாக நடத்தப்படும் இந்த இலவச பயிற்சி பட்டறையில் விரிவான முறையில் எழுதுவது குறித்து போதிக்கப்படும் என்று ஐடபள்யூபி கூறியது.

நிபுணத்துவ முக்கியத்துவம், பாலின விவகாரம் மற்றும் எழுத்தில் நேர்மை போன்றவற்றின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அப்பால் எழுத்தாற்றலை மேம்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

“சரியான கோட்பாட்டைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்து பொருத்தமான வடிவமைப்பு மற்றும் பல்வகை மொழியாற்றல் ஆகியவற்றோடு இன்றைய வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தரமான கற்பனையாற்றல்மிக்க படைப்புகளை எழுதும் முறை மீதும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அக்கழகம் மேலும் விவரித்தது.

மே 11 மற்றும் 12 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறும் முதற்கட்ட பயிற்சியில் அறிவார்ந்த எழுத்தாற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அதே வேளையில், மே 25, 26 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சியில் கற்பனையாற்றல்மிக்க படைப்புகள் மீது கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 


Pengarang :