NATIONAL

பினாங்கு ஜேபிஜே ஊழல் விவகாரம்: 70 விசாரணை அறிக்கைகள் தயார்

கோலாலம்பூர், மே 21-

பினாங்கு சாலைப் போக்குவரத்து இலாகா (ஜேபிஜே) தொடர்பான ஊழல் வழக்கில் குறைந்தது 70 விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கை பிரிவு துணை ஆணையர் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

இந்த விசாரணை அறிக்கைகள் யாவும் பரிசீலிக்கப்பட்டு வருவதோடு விரைவில் குற்றப் பத்திரிகைகள் தயாராகும் என்றும் அவர் சொன்னார்.

இதைத் தவிர்த்து, பினாங்கு ஜேபிஜே தொடர்பான சில ஊழல் வழக்குகள் நோன்பு பெருநாளுக்கு முன்னரோ அல்லது பின்னரோ நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

“இவ்வழக்குகள் தொடர்பாக பலர் விசாரணைக்கு அழைக்கப்படுவர். தற்போதைக்கு பினாங்கு ஜேபிஜே விவகாரம் மீது நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார் அவர்.


Pengarang :