NATIONAL

புகார்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இணைய மோசடி

புத்ரா ஜெயா, மே 28-

பொருட்களின் விலை அதிகரிப்புக்கு அடுத்த நிலையில் இணையம் வழி மோசடி குறித்த புகார்கள் அதிகளவில் உள்ளன. இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதாக உள்நாட்டு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபூடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

சராசரியாக, ஒவ்வொரு மாதமும் அமைச்சிடம் செய்யப்படும் புகார்களில் 35 விழுக்காடு பொருட்களில் விலை அதிகரிப்பு மீதும் 25 விழுக்காடு இணையம் வழியிலான மோசடி மீதான புகார்களாக உள்ளன என்றார் அவர்.

“புகார்களின் பட்டியலில் ஏழாவது அல்லது எட்டாவது நிலையில் இருந்த இணைய மோசடி, தற்போது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது” என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரம் குறித்து மாநாட்டிற்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஓராண்டில் இந்த குற்றச்செயல் கடும் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் விரிவடைந்து வரும் மின்னியல் வர்த்தகத்திற்கு இணையாக இந்த மோசடி நடவடிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அவர் சொன்னார்.

மின் வர்த்தகம் என்பது ஒரு தவிர்க்க முடியாத வணிகமாக இருக்கும் நிலையில் இணைய வர்த்தகர்களைக் கட்டுப்படுத்தும் கோட்பாடுகள் எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
`

ஆயினும், மின் வர்த்தக நடவடிக்கைகளை தமது அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருவதோடு பயனீட்டாளர்கள் நியாயமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :