SELANGOR

புஸ்பாகோம் ஆதரவுடன் செலாமாட் பாலேக் ராயா 1.0 இயக்கம் – யூனிசெல் தொடக்கியது

ஷா ஆலம், மே 30-

தனது உயர்க்கல்வி கழகத்தின் பணியாளர்களின் நலனுக்காக புஸ்பாகோமின் ஒத்துழைப்போடு ஜோம் செலாமாட் பாலேக் ராயா 1.0 எனும் இயக்கத்தை சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யூனிசெல்) தொடக்கியுள்ளது.
நோன்பு திருநாளுக்காக கிராமங்களுக்குச் செல்லும் பணியாளர்களின் பயணம் பாதுகாப்பான முறையில் இருப்பதை உறுதிசெய்வதாக, பயணத்திற்கு முன்னர் தங்களின் வாகனங்களை பரிசோதனை செய்ய வலியுறுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும் என்று யூனிசெல் தலைவரும் துணை வேந்தருமான பேராசிரியர் டதோ டாக்டர் முகமது ரிட்சுவான் ஓஸ்மான் கூறினார்.

“யூனிசெல் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புஸ்பாகோம் ஆதரவோடு இந்த இயக்கம் முதல் முறையாக மேற்கொள்ளப்படுகிறது” என்றார் அவர். தொலை தூரப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பணியாளர்களும் இந்த இயக்க்தின் போது தெரிவிக்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றுவதோடு தங்கள் வாகனங்கள் நெடுந்தூரப் பயணத்திற்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வர் என தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :