SELANGOR

மாநில கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடுவீர்! சிலாங்கூர் ஆட்சியாளர் உத்தரவு

ஷா ஆலம், மே 22-

பகாங் முன்னாள் ஆட்சியாளர் சுல்தான் ஹாஜி அகமது ஷாவின் மறைவை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலம் முழுமையும் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடும்படி மாநில ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா உத்தரவிட்டுள்ளார்.

இன்று தொடங்கி நாளை வரையிலும் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி டுவீட்டர் வழி தெரிவித்தார்.

“மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் பகாங் முன்னாள் ஆட்சியாளர் சுல்தான் ஹாஜி அகமது ஷாவின் மறைவை முன்னிட்டு மாநில கொடிகள் இன்றும் நாளையும் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்” என்று டூவிட்டரில் அமிருடின் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தந்தையை இழந்த துயரத்தில் மூழ்கியுள்ள மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா மற்றும் பகாங் மாநில மக்களுக்கு சிலாங்கூர் மாநில மக்கள் சார்பில் சிலாங்கூர் ஆட்சியாளர் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :