NATIONAL

மெட்ரிகுலேஷன் இடங்கள் அதிகரிப்பு எஸ்.டி.பி.எம் மாணவர்களின் வாய்ப்பை பாதிக்காது

புத்ரா ஜெயா, மே 20-

மெட்ரிகுலேஷன் திட்டத்தில் 15,000 இடங்களை அதிகரிக்க அமைச்சரவை செய்த முடிவினால் பொது பல்கலைக்கழகங்களுக்கான எஸ்.டி.பி.எம். மாணவர்களின் வாய்ப்புகள் பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டது.

மாணவர் சேர்ப்பு நடவடிக்கையில் தகுதி அடிப்படையிலான கொள்கை கடைபிடிக்கப்படுகிறது என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

இந்தக் கொள்கையின் அடிப்படையில் , இன, சமய, வாழ்க்கைத் தரம், மாநிலம் என்ற எந்தவொரு பேதமுமில்லாமல் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றுள்ள அனைத்து மாணவர்களும் தகுதி பெறுவார்கள் என்று அது தெரிவித்தது.

தேர்ந்தெடுக்கப்படும் துறைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பொது மற்றும் சிறப்பு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியது.

பொதுப் பல்கலைக்கழக நுழைவுக்கு மெட்ரிகுலேஷன் மற்றும் எஸ்.டி.பி.எம் மாணவர்களின் கல்வி அடிப்படையிலான மொத்த சராசரி மதிப்பெண்கள் 90 விழுக்காடும் புறப்பாட நடவடிக்கைகளுக்கான மதிப்பெண்கள் 10 விழுக்காடும் கணக்கிடப்படும் என்று அவ்வறிக்கை மேலும் விவரித்தது.


Pengarang :