SELANGOR

மேற்கு கரை விரைவு சாலை நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்!

ஷா ஆலம், மே 27-

கிள்ளானில் அண்மையில் ஏற்பட்ட குடிநீர் விநியோகத் தடைக்குக் காரணமாக இருந்த மேற்கு கரை விரைவு சாலை நிறுவனத்திடமிருந்து மாநில அரசு இழப்பீடு கோரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சாலை நிர்மாணிப்பு பணியின் போது நிலத்திற்கு அடியில் ஏற்பட்ட நகர்வுதான் சம்பந்தப்பட்ட குழாய்கள் உடைவதற்குக் காரணமாக இருந்துள்ளன என்பது மாநில அரசு மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்ததாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“எனவே, சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் மீதான விசாரணை அறிக்கை மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்கே எம்) மற்றும் பொதுப்பணி இலாகா (ஜேகே ஆர்) ஆகிய இரு தரப்பிடம் வழங்கப்படும்” என்றார் அவர்.

“ இந்தச் சம்பவத்தினால் மாநில அரசுக்கு ஏற்பட்ட செலவினம் குறித்த மதிப்பீடு செய்யும் ஆயர் சிலாங்கூர் மற்றும் மலேசிய பொதுப்பணி கழகம் (இக்ரம்) ஆகிய இரு அமைப்புகளிடமிருந்து அறிக்கைக்காக காத்திருக்கிறேன்” என்றார்.


Pengarang :