NATIONAL

ரோம் சாசனம்: பேராசியர்கள் பொறுப்பேற்க வேண்டும்

கோலாலம்பூர், மே 3-

ரோம் சாசனம் குறித்து கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஆட்சியாளர் மன்றத்திடம் விளக்கமளித்த 4 பேராசிரியர்களும் தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பொறுப்பேற்பதோடு இவ்விவகாரம் குறித்து எழுப்பப்படும் ஐயப்பாடுகளைக் களையும் ஆற்றலையும் கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது கல்வியாளர்களின் சுதந்திரத்திற்கு இணக்கம் தெரிவித்த அமைச்சரவையின் முடிவிற்கு ஏற்ப உள்ளது என்று கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலேக் கூறினார்.

“அதே வேளையில், இந்த விவகாரம் அரசியல் நோக்கம் ஏதும் இல்லாமல் தர்க்க ரீதியாகவும் நியாயமான முறையிலும் விவாதிக்கப்பட வேண்டும்” என்றார் அவர்.

எனவே, இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் இந்த விவகாரத்தை பொறுப்புணர்வோடு கையாள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :