NATIONAL

ரோம் சாசனம்: மக்களுக்கு தொடர்ந்து விளக்கமளிக்கப்படும்

பட்டவொர்த், மே 22-

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் சாசனம் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கும் வழியை அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இந்த சாசனத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது குறித்து மக்களின் கருத்தை அறிந்து கொள்ள தமது தரப்பு இவ்விவகாரம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் என்று வெளியுறவு துறை துணை அமைச்சர் டத்தோ மர்சூக்கி யாஹ்யா கூறினார்.

இவ்விவகாரத்தில் மீண்டும் குழப்பம் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. குழப்பமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ரோம் சாசன அமலாக்கத்தை மீட்டுக் கொள்ள அரசாங்கம் முடிவெடுத்தது என்று இங்குள்ள மஸ்ஜிட் அப்துல் காடிரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் டத்தோ மர்சூக்கி தெரிவித்தார்.

“மக்களுக்குத் தேர்வு செய்யும் வாய்ப்பை அளிப்பதாக இது பொருள்படாது. மாறாக, மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கவே விளக்கம் அளிக்கப்படுகிறது. இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் மீண்டும் நிகழ்வதை அரசு விரும்பவில்லை. வருங்காலங்களில் அரசாங்கம் எடுக்கும் முடிவு தொடரப்படுவதை நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

 


Pengarang :