NATIONAL

வங்கி கணக்கில் வெ. 4 கோடியே 20 லட்சமா? – நஜிப் அதிர்ச்சி

கோலாலம்பூர் மே 29-

ஏசான் பெர்டானா நிறுவனம் மூலம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தமது வங்கிக் கணக்கில் யாரோ ஒருவர் 4 கோடியே 20 லட்சம் வெள்ளியை பரிமாற்றம் செய்ததை அறிந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் அதிர்ச்சி அடைந்ததாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நஜீப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவின் குறுக்கு விசாரணைக்கு பதிலளிக்கையில் ஐ. பி. எஸ். பி. நிர்வாக இயக்குனர் டத்தோ சம்சுல் அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தம்மை கைது செய்து விடுவித்த பின்னர் நஜீப் ரசாக்கை அவரது வீட்டில் சந்தித்ததாகவும் அப்போது அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 4 கோடியே 20 லட்சம் வெள்ளி இருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும் சம்சுல் கூறினார்.

தாம் கைது செய்யப்பட்டது மற்றும் தமது உடல் நலம் குறித்து நஜீப்பிற்கு விளக்கம் அளிப்பதற்காக அவரை சந்தித்ததாக ஷாபியின் கேள்விக்கு சம்சுல் பதில் அளித்தார். தமது வங்கிக் கணக்கில் தமக்குத் தெரியாமலேயே யாரோ ஒருவர் இந்த பணத்தை பரிமாற்றம் செய்ததாக நஜீப் தெரிவித்தார். ஆயினும், இந்த விவகாரம் குறித்து தாம் அவரிடம் விவாதிக்கவில்லை என்று சம்சுல் மேலும் சொன்னார்.


Pengarang :