NATIONAL

விலைப் பட்டியல் வைத்திராத கடைகளுக்கு எச்சரிக்கை கடிதம் – கேபிடிஎன்எச்இபி நடவடிக்கை

கோலாலம்பூர், மே 8-

ரம்லான் மாதத்தின் முதல் நாளில் விலைப் பட்டியலை வைக்கத் தவறிய குற்றத்திற்காக நாடு முழுவதிலும் 61 வர்த்தகர்களுக்கு எதிராக எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்பட்டதாக உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு கூறியது.

இந்த எண்ணிக்கையில் 31 அறிக்கைகளைப் பெற்று கிளந்தான் முதலிடத்தை வகிக்கும் வேளையில் கோலாலம்பூர் (12), கெடா(10), புத் ரா ஜெயா(7) மற்றும் நெகிரி செம்பிலான் 1 எச்சரிக்கை கடிதம் பெற்றதாக அமைச்சின் விலைக் கண்காணிப்பு மற்றும் விலையேற்றத் தடுப்புப் பிரிவு தலைமை அதிகாரி மஸ்லினா அகமது தெரிவித்தார்.

“இந்த ரமலான் மாதம் முழுவதும் ரமலான் சந்தை உட்பட அனைத்து உணவகங்களிலும் இந்தச் சோதனை மேற்கொள்ளப்படும். முதல் நாளில் 3,811 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வணிகர்களுக்கு எதிராக 61 எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்பட்டன” என்றார் அவர்.

“ஆரம்பக் கட்டத்தில் நாங்கள் மிகவும் நட்புடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை கூறி எச்சரிக்கை கடிதம் வழங்குவோம். ஆனால், அதே குற்றத்தை மீண்டும் புரிந்தால் அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :