SELANGOR

விவேக கைப்பேசி இல்லாத பயனீட்டாளர்களுக்கு ‘ரொக்கமில்லா’ கட்டண முனையம் உதவும்

சுபாங் ஜெயா, மே 6-

விவேக கைப்பேசி இல்லாத பயனீட்டாளர்களின் தேவையை நிறைவு செய்ய கோடல் பார்க்கிங் நிறுவனத்தின் உதவியோடு ரொக்கமில்லா வாகன நிறுத்துமிட கட்டண வசூலிப்பு முனையத்தை விமான நிலையம் ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்ஜே) மற்றும் ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி பிரிவுடன் விவேக செயலியைப் பயன்படுத்தும் வாகன நிறுத்துமிட கட்டண வசூலிப்பு முறையில் ஷா ஆலம் செக்‌ஷன் 13இல் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த தனியார் நிறுவனமும் ஒத்துழைப்பு நல்கும்.

இந்த விவேக முனையத்தில் ‘ பே அண்ட் கோ ‘ என்ற கொள்கையிலான கட்டண செயலியைப் பயன்படுத்தி ரொக்கம் இல்லாமல் டச் அண்ட் கோ அல்லது டெபிட் மற்றும் கிரேடிட் அட்டைகள் வழி கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்று எம்பிஎஸ்ஜே தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

இந்த முறையின் கீழ், வாகன நிறுத்துமிடக் கட்டணத்தை செலுத்திய பின்னர் பயனீட்டாளர்கள் தங்கள் வாகனத்திற்குத் திரும்பச் செல்லத் தேவையில்லை. மாறாக, இந்த செயலி வழி அமலாக்கத் தரப்பினர் சரிபார்க்கும் அகப்பக்கத்திற்கு இந்தத் தகவல் அனுப்பப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.

மேலும், இந்த முனையத்தில் வாகன நிறுத்திமிடக் கட்டணம் உட்பட பல்வேறு கட்டணங்கள், நில வரி மற்றும் மின் வர்த்தக பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :