SELANGOR

ஹசான் டின் மறைவு மந்திரி பெசார் இரங்கல்

ஷா ஆலம், மே 1-

இன்று காலை 7 மணியளவில் காலமான நாட்டின் பிரசித்தி பெற்ற அரசு தரப்பு வழக்கறிஞர் டத்தோஸ்ரீ அபு ஹாசான் டின் அல் ஹாஃபிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

நாடு ஓர் அற்புதமான சமய அறிஞரை இழந்துவிட்டது என்று அமிருடின் தமது டூவிட்டரில் குறிப்பிட்டார்.

மறைந்த அபு ஹசான் அவர்கள் அல் குர் ஆன் குறித்த அறிவாற்றலை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியுள்ளார் என்றார் அவர்.

அரண்மனையின் முன்னாள் சமய ஆலோசகராகவும் பதவி வகித்துள்ள அபு ஹசான் தமது 72 வயதில் காலமானார் என்று அவரது புதல்வர் முகமது யுஸ்ரி அபு ஹசான் தெரிவித்தார்.


Pengarang :