NATIONAL

2008-இல் சிலாங்கூரில் ஏற்பட்ட சூழ்நிலையை, பாக்காத்தான் அரசாங்கம் தற்போது எதிர் நோக்கி உள்ளது

ஷா ஆலம், மே 16:

துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் இயங்கி வரும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம், 2008-இல் சிலாங்கூர் மாநில அரசாங்கம் எதிர் கொண்ட அதே சூழ்நிலையை தற்போது எதிர் நோக்கி வருகிறது என்று சிலாங்கூர் மாநில அமானா கட்சியின் இளைஞர் அணி தலைவர் அப்பாஸ் சலீமி டத்தோ அஸ்மி கூறினார். 12-வது பொதுத் தேர்தலுக்கு பின் மாநில நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம் போல 14-வது பொதுத் தேர்தலுக்கு பிறகு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

” பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றிய போது மாநிலத்தின் கையிருப்பு சில மில்லியன்களே, தேசிய முன்னணி விட்டுச் சென்ற பல்வேறு சவால்களை நாம் எதிர் கொள்ள வேண்டியதாக இருந்தது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சி இனம் மற்றும் மதம் ஆகிய இரண்டு பிரச்சனைகள் முன் வைத்து சிலாங்கூர் மாநில பாக்காத்தான் அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரத்தை தாக்கியது. மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்  முயற்சியை தடுக்க முயன்றது.

” அப்படி இருந்தும் சிலாங்கூர் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நேர்மையான நிர்வாகத்தின் கீழ் கையிருப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதேபோல் தற்போதைய மலேசிய அரசாங்கமும் “புதிய மலேசியாவை” உருவாக்க நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலையில் தேசிய முன்னணி மற்றும் பாஸ் அதே பாணியை கையாண்டு வருகின்றார்கள்,” என்று டிவி1 கலந்துஉரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார் .


Pengarang :