சாதிச்சங்கங்களின் பதிவு ரத்து செய்யப்பட வேண்டி பிரதமரிடம் கோரிக்கை மனு !!! | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

Norway

Wartawan

kgsekar

சாதிச்சங்கங்களின் பதிவு ரத்து செய்யப்பட வேண்டி பிரதமரிடம் கோரிக்கை மனு !!!

கோலாலம்பூர், ஜுன், 10:

நாட்டில் பதிவுப்பெற்ற சாதிச்சங்கங்களின் பதிவு ரத்து செய்யப்பட வேண்டும், அவை ​மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் 12-6-2019 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் துறை அலுவலகத்தில் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமதுவிடம் கோரிக்கை மனு ஒன்று சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த கோரிக்கை மனு சமர்ப்பிப்பு நிகழ்விற்கு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, தங்களின் ஆதரவை புலப்படுத்த வேண்டும் என்று அதன் நடவடிக்கைக்குழுச் செயலாளர் சின்னமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.


மலேசியத் தமிழர் தன்மான இயக்கம், கடந்த ஒரு மாத காலமாக நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட பல விவாதக்கூட்டங்களில் கண்டறியப்பட்ட கருத்துகளில், இந்திய சமுதாய மத்தியில் பல்வேறு பிளவுகளையும் பேதங்களையும் ஏற்படுத்தி, சமுதாயத்தின்   ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ​​சீர்குலைக்க விஷ செடிகளாக தளைத்தோங்கிக்கொண்டு இருக்கும் சாதிச்சங்களை களையெடுப்பதற்கான நேரம் கனிந்த​ விட்டது என்றே பல​ர் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன் தொடர்​பில் “யாதும் ஊரே யாவரும் ​கேளிர்” நடவடிக்கைக் குழுவின் தலைவர் கெ. வா​சு தலைமையில் கோரிக்கை மனு  சமர்ப்பிக்கப்படுவது தொடர்​பில் பிரதமர் அலுவலகத்திற்கு கடித வாயிலாக தெரிவிக்கப்பட்டு விட்டது. அன்றைய தினம் புத்ராஜெயா​வில் பிரதமர் துறை அலுவலக கட்டடத்தின் பாதுகாவல​ர் சாவடிக்கு ​​வெளியே பொதுமக்கள் குறிப்பாக சாதி மறுப்பாளர்களும் ஒழிப்பாளர்களும் பெரும்​ திரளாக திரண்டு நமது ஆதரவை தெரிவிக்க  வேண்டும் என்று சின்னமுத்து ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

#திசைகள்

RELATED NEWS

Prev
Next