ஜூன் 15இல் சிலாங்கூர் மாநில நோன்பு பெருநாள் பொது உபசரிப்பு | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

ஜூன் 15இல் சிலாங்கூர் மாநில நோன்பு பெருநாள் பொது உபசரிப்பு

ஷா ஆலம், ஜூன் 10-

சிலாங்கூர் மாநில அளவிலான 2019ஆம் ஆண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு செக்‌ஷன் 13, புலாத்தான் பாசாரேனாவில் வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கலந்து கொள்வார் என்று சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டது.  இந்த விருந்துபசரிப்பில் பங்கேற்போர் சிறப்பு கலைஞர்கள் படைக்கும் கலைநிகழ்ச்சியையும் கண்டுகளிப்பர் என்றும் அது கூறியது.


போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்து சேவையைப் பயன்படுத்துமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

RELATED NEWS

Prev
Next