Selangorkini
NATIONAL

மலேசியாவின் கையிருப்பு 102.3 பில்லியன் டாலர்

கோலாலம்பூர், ஜூன் 28-

இவ்வாண்டு மே இறுதி வரை அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துடன் பயன்படுத்தப்படாத மலேசிய நிரந்தர கையிருப்பின் மதிப்பு 102.3 பில்லியன் டாலர் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்துலக நிதி தர பகிர்வு சிறப்பு புள்ளி விவர நடைமுறையின் கீழ் இந்த புள்ளி விவரம் பெறப்பட்டது.

மற்ற அந்நிய நாட்டு நாணய சொத்து 57.9 லட்சம் டாலராகும் என்று மத்திய வங்கியான பேங்க் நெகாரா அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டது. அடுத்த 12 மாதங்களில் கடனுதவி தொடர்பான குறுகிய கால நிதி பரிவர்த்தனை, கடன் உத்தரவாத பத்திரம், அந்நிய செலாவணி மற்றும் அரசாங்கம் அந்நிய நாட்டிடமிருந்து பெற்ற கடனுக்கான தவணைக் கட்டணம் உள்ளிட்ட தொகை 5,965 மில்லியன் அமெரிக்க டாலர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை தெரிவித்தது.

 


Pengarang :