Selangorkini
NATIONAL

மாமன்னருடன் அஸ்மின் சந்திப்பு

கோலாலம்பூர், ஜூன் 18-

மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் -சுல்தான் அப்துல்லா ரித்தாவுடின் அல்-முஸ்தாஃபா பில்லா ஷா அவர்களை பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இஸ்தானா நெகாராவில் நேற்று சந்தித்தார். மாமன்னருடனான தமது சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப் படங்களை கடந்த வாரம் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு மாமன்னர் மேற்கொண்ட வருகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அஸ்மின் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவேற்றம் செய்திருந்தார்.

கடந்த வாரம் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு மாமன்னர் மேற்கொண்ட வருகை குறித்தும் அச்சந்திப்பின்போது பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. தன்னைச் சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்த மாமன்னருக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு அவரின் அறிவுரைகளையும் தான் முழு மனதாக ஏற்றுக் கொள்வதாக அந்தப் பதிவேட்டில் அஸ்மின் குறிப்பிட்டார்.


Pengarang :