“மை மோல் 2 யூ” – இந்திய வர்த்தகர்களை இணைய தளத்தில் இணைக்கிறது | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

Norway

Wartawan

kgsekar

“மை மோல் 2 யூ” – இந்திய வர்த்தகர்களை இணைய தளத்தில் இணைக்கிறது

மலேசிய இந்திய தொழில் தொழில் முனைவர்கள் தங்கள்  தயாரிக்கும் பொருட்களை வியாபார சந்தைக்கு கொண்டு செல்லும் வழி தெரியாமல் பரிதவிப்பவர்களுக்கு வீட்டில் இருந்து கொண்டு தயாரிப்புகளை இணைய தளத்தில் விற்கும் புதிய செயல்திட்டத்தை “மை மோல் 2 யூ” நிறுவனம் உருவாக்கிக் கொடுக்கிறது.

இந்த நிறுவனத்தின் அறிமுக விழா பூச்சோங் ஃபார் போய்ன்ட் செரட்டன் தங்கும் விடுதியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் தலைமையில் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போதைய சூழலில்  வணிகம் புதிய யுகத்தில் பயணித்து கொண்டிருக்கிறது, இந்திய வர்த்தகர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.


“மை மோல் 2 யூ” நிறுவனத்தின் அகப்பக்கத்தில் இந்திய வர்த்தகர்கள் தங்களின் தயாரிப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் வர்த்தகம் செய்பவர்களை தவிர்த்து மற்றவர்களும் இந்த அகப்பக்கத்தில் “மை மோல் 2 யூ” – வில் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம். இதனை அடுத்து, வியாபார பொருட்களை “மை மோல் 2 யூ” அகப்பக்கத்தில் விளம்பரம் படுத்தும் போது உறுப்பினர்கள் தங்களின் முகநூல், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சமூக வலைதளங்களில் வழி பகிரப்பட்ட விளம்பரத்தில் வாயிலாக அகப்பக்கத்தில் சம்மந்தப்பட்ட பொருட்களை வாங்க விண்ணப்பம் செய்தவுடன் பொருட்களின் விலைக்கு ஏற்ப கமிஷன் தொகை கிடைக்கும் என்று நிர்வாகி திருமுருகன் விளக்கம் தந்துள்ளார்.

இந்தியர்கள் சம்பந்தப்பட்ட ஏராளமான தயாரிப்புகளை “மை மோல் 2 யூ” அகப்பக்கத்தில் விளம்பரம் படுத்த அணுகி உள்ளனர் என்று நிறுவனத்தின் உரிமையாளர் திரு ரவி பெருமையுடன் கூறினார். மலேசிய இந்தியர்கள் இலவசமாக இந்த அகப்பக்கத்தில் இணைந்து வீட்டில் இருந்து கொண்டு வருமானம் ஈட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் விவரங்களுக்கு www.mymall2u.my அல்லது 03-83341014 தொடர்பு கொள்ளலாம்.

RELATED NEWS

Prev
Next