NATIONAL

ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு பின்னர் நாடு திரும்பினார் பிரதமர்

பேங்காக், ஜூன் 24:

34ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மிகவும் பயனுள்ளதாக அமைந்தததாக இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்திற்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருந்த பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.

“இது ஒரு மராத்தோன் பாணியிலான கூட்டமாக அமைந்தது. ஒரு கூட்டம் முடிந்ததும் மற்றொரு கூட்டம். எனக்கு மூச்சு விடக்கூட நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஆசியான் மாநாட்டில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன” என்று மகாதீர் செய்தியாளர்களிடம் கூறினார்.

டாக்டர் மகாதீர் தலைமையிலான மலேசிய பேராளர் குழு தாய்லாந்து ஜெனரல் பிராயுத் சான் ஒ சாவுடன் இரு முனை சந்திப்பு நடத்தியது. ஆசியான் நாடாளுமன்ற தலைவர்களுக்கிடையிலான சந்திப்புக் கூட்டம், ஆசியான் இளைஞர் பிரதிநிதி கூட்டம், ஆசியான் வர்த்தக ஆலோசக மன்ற பிரதிநிதிகளின் கூட்டம் ஆகிய மூன்று கூட்டங்களில் நேற்று மகாதீர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :