NATIONAL

உடற்பேறு குறைந்தோருக்கான வசதிகள் ஏற்படுத்த சிறப்பு செயற்குழு – ஜூரைடா

புத்ராஜெயா, ஜூன் 3:

நிர்மாணிக்கப்படும் வீடமைப்பு மற்றும் பொது கட்டங்கள் உடற்பேறு குறைந்தோருக்கான வசதிகளோடு இருப்பதை உறுதிப்படுத்த அமைச்சுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு செயற்குழு ஒன்று தோற்றுவிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள கட்டடங்களில் உடற்பேறு குறைந்தோருக்கான அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் கூறினார்.
“ஊராட்சி மன்றத்தின் பெரிய கட்டடத்தில் இந்தத் தரப்பினருக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும், இதர சிறிய கட்டடங்களில் இது மேம்படுத்தப்பட வேண்டும்” என்றார் அவர்.

உடற்பேறு குறைந்தோரின் தேவையை நிறைவேற்றக் கூடிய வசதிகளை ஏற்படுத்துவதில் அமைச்சுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கக் கூடிய செயற்குழு ஒன்று இன்னம் ஆறு மாதங்களில் தோற்றுவிக்கப்படும் என்று தமது அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜூரைடா தெரிவித்தார்.
தோற்றுவிக்கப்படும் செயற்குழுவில் உடற்பேறு குறைந்தோரும் ஆலோசகர்களாக இடம்பெறுவதோடு தேசிய அடிப்படை வசதிகள் மேம்பாட்டில் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :