NATIONAL

எஸ்பிஆர்எம் தலைமை ஆணையராக நியமனம் செய்யப்பட்ட லத்தீப்பா கோயாவிற்கு வாழ்த்துக்கள் – ஸூரைடா

புத்ரா ஜெயா, ஜூன் 4:

நாட்டின் முதல் பெண்மணியாக லத்தீப்பா பீபி கோயா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக நியமனம் செய்யப்பட்டது முடிவு செய்யும் உரிமை கொண்ட பதவிக்கு பெண்களை தலைமையேற்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு தூண்டுகோலாக விளங்குகிறது.

தொழில்முறை பின்னணியை கொண்ட லத்தீப்பா கோயா ஒரு தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவர் ஆவர். பொதுநலச் சிந்தனை கொண்டவருமான லத்தீப்பாவை நியமனம் செய்தது , நாட்டின் நிர்வாகத்தில் மறுமலர்ச்சியை கொண்டு வரும் அரசாங்கத்தின் எண்ணம் தெரிகிறது. நேர்மையான மற்றும் நம்பகத்தன்மை மிகுந்த அரசாங்க நிர்வாகம் இந்த நியமனத்தின் மூலம் மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மிக அனுபவம் வாய்ந்த வழக்கறிஞருமான லத்தீப்பா கோயாவிற்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நியமனத்தின் மூலம் மலேசிய மக்கள் நன்மை அடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மாண்புமிகு புவான் ஹாஜா ஜூரைடா கமாருடின்
பாக்காத்தான் ஹாராப்பான் மகளிர் தலைவி


Pengarang :