SELANGOR

குடிநீர் கட்டணம் அதிகமாக இருப்பதற்கு பழுதடைந்த குழாய்களே காரணம்

ஷா ஆலம், ஜூன் 21:

குடிநீர் பயனீட்டு கட்டணம் அதிகமாக இருப்பதற்கு சம்பந்தப்பட்ட வீட்டின் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதும் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை உறுதிப்படுத்த, பயனீட்டாளர் தனது வீட்டின் அனைத்து குழாய்களையும் அடைத்துவிட்டு மீட்டரை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.

குடிநீர் குழாய்கள் அனைத்தையும் அடைத்துவிட்டு, பத்து நிமிடங்களுக்குப் பிறகு மீட்டரை வாசிக்க வேண்டும். அச்சமயம் அந்த மீட்டரின் எண்கள் தொடர்ந்து நகர்ந்தால், அங்கு தண்ணீர் குழாயில் துவாரம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம் என்று ஆயர் சிலாங்கூர் அறிக்கை தெரிவித்தது.

அதே வேளையில், மீட்டரில் பழுது ஏற்பட்டிருந்தாலும் குடிநீர் கட்டண பில் அதிகமாக இருக்கும் சாத்தியம் உண்டு என்றும் அது கூறியது.
“இவைத் தவிர்த்து மீட்டரைத் தவறாகக் கணக்கிட்டாலும் பில் கட்டணம் அதிகமாக இருப்பதற்கு சாத்தியம் உள்ளது. அப்படி நடந்திருக்கும் என்று நீங்கள் சந்தேகித்தால் உடனே எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்” என்று அவ்வறிக்கை தெரிவித்தது.


Pengarang :