SELANGOR

குப்பைத் தொட்டி வைத்திராதவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது !!!

ஷா ஆலம், ஜூன் 20:

தூய்மைக்கேட்டு பிரச்னைக்குத் தீர்வு காண, தங்கள் பகுதிகளில் குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்தும்படி செந்தோசா சட்டமன்ற தொகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தமது தரப்பும் கிள்ளான் நகராண்மைக் கழகமும் (எம்பிகே) விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைபிடிக்காது என்றும் அலட்சியம் செய்யும் தரப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் கூறினார்.

“மிகவும் அசுத்தமாக இருக்கும் வர்த்தக மற்றும் வீடமைப்பு பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். அவற்றின் தூய்மைக்கேட்டிற்கு குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததே முக்கிய காரணம் என்றும் நாங்கள் அறிந்துள்ளோம்” என்றார் அவர்.

“தங்கள் வீடுகளில் குப்பைத் தொட்டிகளை வைத்திராத பொது மக்களை நாங்கள் குறைசொல்லவில்லை. மாறாக, கண்ட இடங்களில் குப்பைகளைப் போடும் தரப்பினரின் செய்கையால் இப்பகுதிகள் அசுத்தமாக உள்ளன” என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :