NATIONAL

கேஎல்ஐஏவில் முதலாவது திறந்த வெளி விமான கண்காணிப்பு பகுதி

சிப்பாங், ஜூன் 17:

இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) விமானம் புறப்படும் மற்றும் வந்திறங்குவதைக் காணும் பகுதி பொது மக்களுக்காகத் தற்போது திறந்துவிடப்பட்டது.
கேஎல்ஐஏவில் இருந்து விமானம் புறப்படும் மற்றும் தரையிறங்கும் காட்சியை ஒரே நேரத்தில் 40 பேர் பதிவு செய்யும் வசதியை ‘அஞ்ஜோங் ஸ்போட்டர்’ என்ற இப்பகுதி கொண்டுள்ளது. இது 3 லட்சம் வெள்ளி செலவில் கட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.

கேஎல்ஐஏ வந்தடையும் சுற்றுப்பயணிகள் அவசியம் வருகை புரியும் ஓர் இடமாக ‘அஞ்ஜோங் ஸ்போட்டரை’ திகழச் செய்ய தாங்கள் திட்டமிட்டிருப்பதாக மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) தலைமை நிர்வாக அதிகாரி ராஜா அஸ்மி ராஜா நசுடின் தெரிவித்தார்.

“தற்போது அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குவதைக் காண்பதற்காக இங்கு வருகின்றனர். விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் பல்வேறு வகையான படங்களை எடுக்கின்றனர்” என்று இங்கு
‘அஞ்ஜோங் ஸ்போட்டரை’ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் எம்ஏஎச்பி தலைவர் டான்ஸ்ரீ ஜைனுன் அலியும் கலந்து கொண்டார்.


Pengarang :