NATIONAL

சிவில் உரிமை பறிப்பு நடவடிக்கை: அம்னோவை திவாலாக்குவதற்கு அல்ல

கோலாலம்பூர், ஜூன் 24-

அம்னோவைச் சேர்ந்த 41 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சிவில் உரிமைகளை அகற்றும் நடவடிக்கையானது அக்கட்சியை திவாலாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையே என்ற குற்றச்சாட்டை துன் மகாதீர் மறுத்தார்.

“இதுதான் எங்கள் நோக்கம் என்றால் அதை நாங்கள் எப்போதோ செய்திருப்போம்” என்றார் அவர்
“மாறாக, குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய போதிலும் ‘போஸ்கூ’ என்ற அடைமொழியோடு நாடெங்கிலும் சுதந்தரமாக நடமாடுவதற்கு நஜிப்பிற்கு நாங்கள் அனுமதித்துள்ளோம்” என்று 2019 ஆசிய எண்ணெய், எரிசக்தி மாநாட்டை தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் தெரிவித்தார்.

முன்னதாக, 1எம்டிபி தொடர்பான 270 மில்லியன் வெள்ளி நிதியைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையாக கடந்த வெள்ளிக்கிழமை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) 41 தனிநபர் மற்றும் நிறுவனங்களின் சிவில் உரிமையை அகற்றுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்தது.


Pengarang :