SELANGOR

சுங்கை செமினி துர்நாற்றத்திற்கு செம்பனை தொழிற்சாலையே காரணம்

ஷா ஆலம், ஜூன் 27-

சுங்கை செமினி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வீசிய துர்நாற்றத்திற்கு அப்பகுதியில் இயங்கும் செம்பனை ஆலையே காரணம் என்று கண்டறியப்பட்டதாக ஹீ லோய் சியான் தெரிவித்தார்.

காற்றுத் தூய்மைக்கேடு மேலும் மோசமடைவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அதன் நடவடிக்கைகள் மற்றும் கழிவுகள் வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருப்பதாக சுற்றுச் சூழல், பசுமை தொழில்நுட்பம், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் பயனீட்டாளர் விவகார துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ கூறினார்.

இதனிடையே, இதே போன்ற நடவடிக்கையில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது 1999ஆம் ஆண்டு லுவாஸ் சட்டத்தின் பிரிவு 121இன் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து தனது தரப்பு ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.
சுங்கை செமினி தொடங்கி சுங்கை ரிஞ்சிங் வரை 450 மீட்டர் தூரத்தில் உள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் மீது கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.


Pengarang :