SELANGOR

சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது

ஷா ஆலம், ஜூன் 27-

சுத்திகரிக்கப்படாத தண்ணீர் துர்நாற்றம் காரணமாக தற்காலிகமாக தடைபட்ட சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குடிநீர் பங்கீட்டு முறைக்கு தண்ணீரை விநியோகிக்கும் நடவடிக்கை கட்டம் கட்டமாக மீண்டும் தொடங்கின என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ராவோஃப் அகமது கூறினார்.

குடிநீர் விநியோகம் மீண்டும் முழு அளவில் செயல்படும் வரையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லோரி மூலம் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கை தொடரும் என்றும் 12 ஓரிட சேவை மையங்களும் செயல்படத் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

“பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்ப அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார் அவர்.


Pengarang :