SELANGOR

தகவலைப் பகிர்வதற்கு முன் சிந்திப்பீர்!

ஷா ஆலம், ஜூன் 21:

சம்பந்தப்பட்ட ஒரு தகவலை வெளியிடுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்னர் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம், இல்லையெனில் அது ஓர் அவதூறு என வகைப்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

சமூக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள அதிநவீன வளர்ச்சியானது மக்களை அச்சுறுத்தும் ஓர் ஊடகமாக உருமாறத் தொடங்கியுள்ளது. இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் அனைத்து சம்பவங்கள், தகவல்கள் மற்று செய்திகளும் விரைவாகவும் பரவலாகவும் எளிதில் பரப்பப்படுகின்றன. வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற ஊடகங்கள் மூலம் அனைத்து தகவல்களும் நொடிப் பொழுதில் உலகெங்கிலும் பரவுகின்றன என்று சிலாங்கூர் இஸ்லாமிய துறை பள்ளிவாசல் நிர்வாக பிரிவு வெளியிட்ட “ஃபிட்னா மெம்பாவா புனா” எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியே சம்பந்தப்பட்ட செய்திகளை ஊர்ஜிதம் செய்ய கால அவகாசம் அளிக்காமல் அடுத்தவருக்கு பகிர்வதற்கு காரணமாகிறது என்றும் அந்நூல் கூறியது.


Pengarang :