SELANGOR

நிபந்தனையை மீறுவோரின் வாடகை உடன்படிக்கை ரத்தாகும்

கிள்ளான், ஜூன் 20-

மக்கள் வீடமைப்புத் திட்டத்திற்காக (பிபிஆர்) ஸ்மார்ட் வாடகை திட்டத்தின் கீழ் வாடகைக்கு வீடப்பட்டுள்ள வீட்டிற்கான நிபந்தனைகளை மீறுவோரின் வீடுகளைப் பறிமுதல் செய்ய மாநில அரசாங்கம் தயங்காது என்று தெரிவிக்கப்பட்டது.

விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைக் கடைபிடிக்கும் பொறுப்பை வீடுகளை வாடகைக்கு எடுப்பவர்கள் கொண்டிருப்பது அவசியம் என்று வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வாழ்க்கை துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹனிசா தாய்ஹா கூறினார்.
நிபந்தனைகளை மீறுவோர் அந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் இதர அனுகூலங்களை உடனடியாக இழப்பர் என்றும் அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட வீடுகளைப் பெற்றிருப்போர் வீட்டின் ஒரு பகுதியை அல்லது வீட்டை பிறருக்கு வாடகைக்கு குடியிருக்க அனுமதிக்கக் கூடாது என்று அவர் நினைவுறுத்தினார்.

“இது தவிர்த்து, ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதிக்குள் வாடகையைச் செலுத்துவோர் மட்டுமே குறிப்பிட்ட தவணைக் கால முடிவில் 30 விழுக்காட்டு கழிவைப் பெறத் தகுதி பெறுவர்” என்றார்.


Pengarang :