SELANGOR

நோன்பு பெருநாளையொட்டி தனி மனை வரி அபராதத்திற்கு விலக்களிப்பு!

ஷா ஆலாம், ஜூன் 19:

நோன்பு பெருநாளையொட்டி மாநில ஆட்சிக் குழு வாயிலாக சிலாங்கூர் மாநிலம் அடுக்குமாடி மேம்பாட்டு திட்டத்திற்கான மனை வரி அபராதத்திற்கு விலக்களிப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த விலக்களிப்பு ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“அடுக்குமாடி வீடுகளைக் கொண்டிருக்கும் சிலாங்கூர் மக்களுக்கு வழங்கப்படும் நோன்பு பெருநாள் பரிசு இது. கூட்டாகச் சேர்ந்து சிலாங்கூரை முன்னேற்றம் காணச் செய்யும் திட்டத்திற்கு ஏற்ப மாநிலத்தின் முழுமையான மேம்பாட்டை உறுதிப்படுத்த மக்கள் தனி மனை நில வரி செலுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.
“தாமதமாக செலுத்தப்படும் வரிக்கு அபராதம் செலுத்துவதைத் தவிர்க்க ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு முன்னதாக வழங்கப்பட்டிருக்கும் இந்த வாய்ப்பை மாநில மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :