NATIONAL

பாசீர் கூடாங்கில் நிலையற்ற மேம்பாட்டு நடவடிக்கைகள்

புத்ராஜெயா, ஜூன் 28-

பாசீர் கூடாங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையற்ற மேம்பாட்டு நடவடிக்கைகள் சுற்றுச் சூழலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்தார்.

ரசாயனம் சார்ந்த தொழில்துறையும் பள்ளிக்கூடங்கள், வீடமைப்பு மற்றும் சமூக நடவடிக்கை மையம் ஆகிய பகுதிகளும் ஒரே இடத்தில் அமைந்துள்ளதால். ரசாயன கழிவின் நச்சுத் தன்மைக்கு அங்குள்ள மக்கள் இலக்காகும் அபாயம் அதிகமாக இருப்பதாக அவர் சொன்னார்.

பாசீர் கூடாங்கில் 2,005 தொழிற்பேட்டைகள் உள்ளன. அவற்றுள் 250 ரசாயனம் சார்ந்தவையாக இருக்கின்றன என்று மூச்சுத் திணரலுக்கு ஆளான பள்ளி மாணவன் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயோ மேற்கண்டவாறு பதிலளித்தார்.

பாசீர் கூடாங்கில் அதிகரித்து வரும் மேம்பாட்டு நடவடிக்கைகளும் ரசாயனம் சார்ந்த தொழிற்பேட்டைகளும் காற்று. நிலம் மற்றும் ஆறுகள் ஆகியவற்றை உட்படுத்தும் சுற்றுச் சூழலுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றார் அவர்.
அந்தச் செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜுல்கிப்ளி அகமதுவும் பங்கேற்றார்.


Pengarang :