NATIONAL

புத்தாக்க தொழில்நுட்ப செயல்திட்டங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது

கோலாலம்பூர், ஜூன் 17:

புத்தாக்க தொழில்நுட்பத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் ஆற்றல்மிக்க செயல் திட்டங்களை வடிவமைக்க நாட்டிற்கும் நிதி தொழிற்துறைக்கும் தற்போது தேவை அதிகரித்திருப்பதாக மத்திய வங்கியின் கவர்னர் நோர் ஷம்சியா முகமது யூனுஸ் தெரிவித்தார்.

ஒற்றுமைமிக்க, நிலையான மற்றும் முழுமையான நாடு இணைய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்பதை அவர் மேற்கோள் காட்டினார்.
“வியூக மற்றும் நடவடிக்கைகள் மீதான ஆபத்தை நாம் கருத்தில் கொள்வேமேயானால் பொருளாதாரத்தை முழுமையாக ஆதரிக்கும் கடப்பாடு நமக்கு ஏற்படும்” என்று இங்கு முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 2019 மைஃபின்டெக் வாரத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

“உலகமே பெரும் உருமாற்றம் பெற்றுள்ளது. எனவே நாமும் நமது கவனத்தை ஐந்து மெகா டிரெண்ட் மீது செலுத்துவது அவசியமாகும்: என்றார்.
ஆசியாவின் எழுச்சி, பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் ஆபத்து, சரிசமமில்லாத வருவாய் , கொள்கொ பாதுகாப்பு போன்றவற்றின் மீது கவனம் செலுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.


Pengarang :