SELANGOR

பெட்டாலிங் வட்டாரத்தில் குடிநீர் தடை நாளை வழக்க நிலைக்குத் திரும்பும்

ஷா ஆலம், ஜூன் 28-

பெட்டாலிங் வட்டாரத்தில் உள்ள 66 பகுதிகளைப் பாதித்த குடிநீர் விநியோகத் தடை நாளை காலை 6 மணிக்குள் முழுமையாகச் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீரமைக்கும் பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

அதே வேளையில், சிப்பாங், கோல லங்காட் மற்றும் உலு லங்காட் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலைக்குள் குடிநீர் விந்யோகம் வழக்க நிலைக்குத் திரும்பி விடும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ராவோஃப் அகமது கூறினார்.

இப்பகுதிகளில் சீரமைக்கும் பணி 95 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளன என்றும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குள் நிலைமை முழுமையாகச் சீரடையும் என்றும் அவர் சொன்னார்.

“இதனிடையே, லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கை மற்றும் ஓரிட சேவை மையம் ஆகியவை குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும் வரை தொடர்ந்து செயல்படும்” என்றார் அவர்.


Pengarang :