SELANGOR

பெல்டா குடியேற்றக்காரர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு 500 வீடுகள் ஒதுக்கீடு!

ஷா ஆலாம், ஜூன் 18-

கூட்டரசு நில மேம்பாட்டு வாரியத்தின் (பெல்டா) குடியேற்றக்காரர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்காக மாநில அரசாங்கம் இடாமான் சாஹாயா வீடமைப்பு பகுதியில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட 500 வீடுகளை ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் 100 வீடுகள் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடமை வாரியத்திடம் (எல்பிஎச்எஸ்) ஒப்படைக்கப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“இடாமான் சாஹாயா வீடமைப்பு திட்டம் என்கோப் பெர்ஹாட்டின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படு கிறது. இதில் பாதி வீடுகளை பெல்டா கொண்டுள்ளது. இதன் பொருட்டு குடியேற்றக்காரர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்காக பிரத்தியேகமாக 500 வீடுகளை நாங்கள் வழங்குகிறோம்” என்றார் அமிருடின்.

” அதே வேளையில், மேலும் 100 வீடுகள் மாநில அரசாங்கத்தின் கீழ் விவேக வாடகை மற்றும் டானாசெல் திட்டத்திற்காக எல்பிஎச்எஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டன” என்று இங்குள்ள டேவான் ஜூப்ளி பேராக்கில் நடைபெற்ற மஸ்ட் ஏசான் மேம்பாட்டு நிறுவனத்திற்கும் பிஎன்எஸ்பி-எம்ஜிபி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடும் நிகழ்ச்சி, இடாமான் வாரிசான மற்றும் 2019 நோன்பு பெருநாள் நிகழ்ச்சி ஆகியவற்றிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.


Pengarang :