NATIONAL

வெ12.97 மில்லியன் ஊழல் : குற்றச்சாட்டை மறுத்தார் ஜாஹிட்

கோலாலம்பூர், ஜூன் 26:

தேசிய வெளிநாட்டு விசா முறை (விஎஸ்என்) தொடர்பில் 12.97 மில்லியன் வெள்ளியை கையூட்டாகப் பெற்றதாக இங்குள்ள நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி மறுத்தார். செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில் வாசிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அகமது ஜாஹிட் (வயது 66) மறுத்தார்.

சீனா மற்றும் விஎஸ்என் திட்டங்களில் ஓரிட சேவை மையத்தைத் தொடர அனுமதித்த உள்நாட்டு அமைச்சின் மூத்த அரசாங்க அதிகாரி என்ற முறையில் ஷாரிகாட் அல்ட்ரா கிரானா நிறுவனத்திடம் ஊக்குவிப்பு தொகையாக 24 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளியைப் பெற்றதாக தம்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அகமது ஜாஹிட் மறுத்து விசாரணை கோரினார்.

2009 எஸ்பிஆர்எம் சட்டத்தின் பிரிவு 16 மற்றும் பிரிவு 24(1) ஆகியவற்றின் கீழ் சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது சம்பந்தப்பட்ட தொகையைக் காட்டிலும் ஐந்து மடங்கு தொகை அல்லது கையூட்டாகப் பெற்ற தொகை அல்லது 10,000 வெள்ளிக்கும் குறையாத தொகை அபராதமாக விதிக்கப்படும்.


Pengarang :