SELANGOR

ஷா ஆலம், கிள்ளான் குடிநீர் விநியோகத் தடை: குழாய் உடைந்ததே காரணம்

ஷா ஆலம், ஜூன் 26:

ஷா ஆலாம் மற்றும் கிள்ளான் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட குடிநீர் விநியோகத் தடைக்கு செக்‌ஷன் 15, ஆட்டோமோபில் சதுக்கம் அருகே உள்ள முதன்மை குழாய் உடைந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த முதன்மை குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக காஜாங் ஆயர் லீபாட் குளத்தின் நீரின் அளவு 70 மில்லியன் லிட்டர் குறைந்ததாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ராவோஃப் அகமது கூறினார்.

மூன்றாம் தரப்பினரின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத குடிநீர் விநியோகத் தடையால் 99,454 பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.குழாய் பழுது பார்க்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 24 மணி நேரத்திற்குள் இவை நிறைவுபெறும் என்றார் அவர்.

இந்தச் சம்பவத்தால் பாதிப்புற்ற பகுதிகளில் அம்பாங் போட்டானிக், ஜோஹான் செத்தியா, தாமான் கிள்ளான் ஜெயா, பாயு பெர்டானா, கேம் ரிம்பா மற்றும் ராஜா மூடா மூசா சாலை ஆகிய பகுதிகளும் அடங்கும்.


Pengarang :