Selangorkini
SELANGOR

பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார் மந்திரி பெசார்

ஷா ஆலம், ஜூலை 10:

94ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நாட்டைத் தொடர்ந்து வழி நடத்துவதற்கு ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் இறைவன் இவருக்கு வழங்குவார் என்றும் தனது டூவிட்டரில் வெளியிட்ட செய்தியில் அமிருடின் குறிப்பிட்டார்.

டாக்டர் மகாதீர் 1925ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி கெடா, அலோர்ஸ்டாரில் பிறந்தார். 1981ஆம் ஆண்டு தொடங்கி 2003ஆம் ஆண்டு வரையில் நாட்டின் 4ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றிருந்த துன் மகாதீர் கடந்த ஆண்டு நாட்டின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்றார்.


Pengarang :