Selangorkini
SELANGOR

ரூமா சிலாங்கூர்கூ வீடமைப்புத் திட்டம்: 189,829 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

ஷா ஆலம், ஜூலை 29-

மாநில அரசாங்கத்தின் சிலாங்கூர்கூ வீடமைப்புத் திட்டத்திற்காக இவ்வாண்டு ஜூலை முதல் தேதி வரையில் 189,829 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வாழ்க்கை துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹானிஸா தால்ஹா கூறினார்.

இவ்வாண்டு ஜூன் மாத இறுதி வரையில் இத்திட்டத்தின் கீழ் 255 வீடமைப்புத் திட்டங்கள் மேம்படுத்தப்படுவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
ரூமா சிலாங்கூர்கூ திட்ட தரவு ஊராட்சி மன்ற புள்ளி விவரங்கள் அடிப்படையலானது என்றும் இது மாநில சட்டமன்ற புள்ளி விவரங்களைப் பின்பற்றவில்லை என்று அவர் விளக்கினார்.

சம்பந்தப்பட்ட 255 திட்டங்களில் 31 திட்டங்களில் வீடுகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டுவிட்டன. மேலும் 61 திட்டங்களின் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேளையில் 163 திட்டங்கள் திட்டமிடப்பட்டு வருவதாக ஹானிஸா கூறினார்.


Pengarang :