NATIONAL

ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் சகித்துக் கொள்ள முடியாது

ஷா ஆலம், ஜூலை 11-

ஊழல், முறைகேடு அல்லது அதிகார துஷ்பிரயோகம் போன்ற நடவடிக்கைகள் மாநில நிர்வாகத்தில் நடைபெறுபவதை மாநில அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்காது என்று ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் வலியுறுத்தினார்.

“லஞ்சம் கொடுப்பதும் குற்றம். லஞ்சம் வாங்குவஅஅதும் குற்றம்” என்றார் அவர்.
“புதிய மலேசியாவில் லஞ்சத்திற்கு இடமில்லை. வெளிப்படையான, தூய்மைமிக்க மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உருவாக்கும் இலக்கை கொண்டுள்ள இம்மாநில அரசாங்கம் ஊழலை எதிர்த்து கடுமையாகப் போராடும்” என்றார்.

லஞ்சம் கொடுப்பதில் இருந்து பொது மக்கள் விலகியிருப்பதோடு அத்தகைய நடவடிக்கைகள் நடைபெறுவதை அறிந்தால், உடனடியாக புகார் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற அமலாக்க அதிகாரி குறித்து பேசிய இங், சம்பந்தப்பட்ட அதிகாரி அலுவலகத்திற்கு வெளியே பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மீதான புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொன்னார்.


Pengarang :