SELANGOR

எம்பிஏஜே வாடிக்கையாளர்களுக்கு ‘விவேக தொட்டி’ திட்டம்

அம்பாங், ஜூலை 11:

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் கட்டட மற்றும் கட்டட கலைத் துறை வாயிலாக எளிதில் நகர்த்தக்கூடிய ‘விவேக தொட்டியை’  ஏற்பாடு செய்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இந்தப் புத்தாக்க சாதனம் அறிமுகப் படுத்தப்பட்டதாக இக்கழகத்தின் தகவல் மற்றும் தொழில் கழக பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த விவேக தொட்டியில் கைகளைக் கழுவலாம். மெல்லிய துணி, சவர்க்காரம் மற்றும் குப்பைத் தொட்டி வைக்கும் இடம் ஆகியவையும் காணப்படும் என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் விவரித்தார்.
“அதே சமயம், சுடுநீரின் அளவை அறிந்து கொள்ள மின்சார நீர் அளவு வழிகாட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :