SELANGOR

கேடிஇபிடபள்யுஎம் நிறுவனத்தின் சமூக கடப்பாட்டு வழி குப்பைத் தொட்டிகள் விநியோகிக்கப்பட்டன

ஷா ஆலம், ஜூலை 24-

துப்புரவு நிர்வாக நிறுவனமான கேடிஇபிடபள்யுஎம் தனது சமூக கடப்பாடு நடவடிக்கையாக 5 குப்பைத் தொட்டிகளை சுபாங் ஜெயா மற்றும் கிள்ளான் பகுதிகளுக்கு வழங்கியது.

‘லீச் பின்’ எனும் புது வகையான குப்பைத் தொட்டி ஒன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள டேசா மெந்தாரி அடுக்குமாடி குடியிருப்புக்கு வழங்கிய வேளையில் மேலும் ஒரு குப்பைத் தொட்டி பாகான் ஹைலாம் குடியிருப்பாளர் செயற்குழுவிடம் வழங்கப்பட்டது. அதே வேளையில், ஸ்ரீ நிப்பா அடுக்குமாடி குடியிருப்பின் மறு சுழற்சி நடவடிக்கைக்காக ஒரு தொட்டி வழங்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் பொது தொடர்பு மற்றும் ஊடகப் பிரிவு தலைவர் மாஹ்ஃபுஸா முகமது தார்மிடி கூறினார்.

“சம்பந்தப்பட்ட குப்பைத் தொட்டிகள் பழுதடைந்த தொட்டிகளுக்குப் பதிலாக மட்டும் வழங்கப்படவில்லை. மாறாக, குப்பைகள் முறையாக வீசப்படுவதற்கும் அவை அகற்றப்படும் நடவடிக்கை சீராக நடைபெறுவதற்கும் புதிய குப்பைத் தொட்டிகள் வழிவகுக்கும்” என்றார் அவர்.

“இவைத் தவிர்த்து ஸ்ரீ நிப்பா அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்கள் மத்தியில் மறு சுழற்சி நடவடிக்கையை ஊக்குவிப்பதோடு அக்குடியிருப்பு மக்கள் தங்கள் இல்லங்களைத் தூய்மையாக வைத்திருக்கக் கோரும் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதமாகவும் எங்கள் நடவடிக்கை அமைந்தது” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :