RENCANA PILIHANSELANGOR

சிங்கை, ஜப்பான் சந்தைகளில் சிலாங்கூர் விவசாயப் பொருட்கள்

ஷா ஆலம், ஜூலை 23-

மாநில அரசாங்கம் மேற்கொள்ளும் தொடர்ச்சியான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக சமைக்கப்படாத பொருட்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் ஆகியவை சந்தையில் அதிக மதிப்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஃபாமா எனப்படும் கூட்டரசு விவசாய சந்தை வாரியத்தின் உதவியோடு வெளி நாடுகளில் நடக்கும் கண்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்பது மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றாகும்” என்று அடிப்படை மற்றும் பொது வசதி, நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இஸாம் ஹாசிம் தெரிவித்தார்.

மாநிலத்தைச் சேர்ந்த தொழில்முனைவர் குழு ஒன்று சிங்கப்பூரில் நடைபெறும் மலேசிய விழாவிற்குச் சென்றுள்ளனர். இந்தச் சந்தையில் ஆண்டுதோறும் விற்பனை விகிதம் 20 விழுக்காடு அதிகரித்து வந்துள்ளது என்றார் அவர்.

இது தவிர்த்து நவம்பர் 11ஆம் தேதி ஜப்பானில் நடைபெறவிருக்கும் சந்தையிலும் மாநில தொழில் முனைவர்கள் கலந்து கொள்வதற்குத் தேவையான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :