SELANGOR

சிலாங்கூரின் வருவாய் வெ.1.214 பில்லியனை எட்டியது

ஷா ஆலம், ஜூலை 11:

சிலாங்கூர் மாநிலம் இவ்வாண்டு ஜூன் 7ஆம் தேதி வரையில் 1.214 பில்லியன் வருவாய் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 1.1 பில்லியன் வெள்ளியை மட்டுமே பெற்றிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்மாநிலத்தின் வருவாய் 13.79 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சிலாங்கூரில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 18.947 பில்லியன் வெள்ளியை முதலீடு செய்துள்ளனர். இது 2017ஆம் ஆண்டு பெறப்பட்ட 5.592 பில்லியன் வெள்ளி முதலீட்டுன் ஒப்பிடுகையில் 238 விழுக்காடு அதிகமாகும் என்றார் அவர்.

“இந்தத் தொகையானது சிலாங்கூர் வரலாற்றில் பெறப்பட்ட மிகப் பெரிய முதலீடாகும். இந்த ஆரோக்கியமான வளர்ச்சியானது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதோடு 2019ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது” என்றார் அவர்.
“இது தவிர்த்து, மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதை இது உறுதி செய்கிறது” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :