SELANGOR

சுக்மா 2020: மின்னியல் விளையாட்டாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்!

ஷா ஆலம், ஜூலை 9-

ஜோகூரில் நடைபெறவிருக்கும் 2020 சுக்மா மின்னியல் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறக்கூடிய விளையாட்டாளர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கை ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 31 வரை நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் (எம்எஸ்என்) தெரிவித்தது.

மின்னியல் விளையாட்டுப் போட்டிகளில் தனிநபராக அல்லது குழுவாகப் பங்கேற்க விரும்புவோர் 20 வயதுக்கு குறையாமலும் இம்மாநிலத்தில் பிறந்தவர் , குடியிருப்பவர், படித்துக் கொண்டிருப்பவர் அல்லது வேலை பார்ப்பவராக இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் எம்எஸ்என் அதன் ஃபேஸ்புக்கில் அறிவித்துள்ளது.

டோத்தா 2, மொபைல் லெஜண்ட் பேங் (எம்எல்பிபி) மற்றும் புரோ எவொலுஷன் காற்பந்து (பிஇஎஸ்) ஆகிய விளையாட்டுகளே சுக்மா போட்டியில் இடம்பெறும் மின்னியல் விளையாட்டு போட்டிகளாகும். டோத்தா 2 விளையாட்டுக்கான தகுதிச் சுற்றி ஆட்டங்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி பாங்கி ஈபுளு ஃபோர்லைஃப் அரங்கிலும் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஷா ஆலம் ரிபல்ஸ் அரங்கிலும் நடைபெறவிருப்பதாக சிலாங்கூர் எம்.எஸ்.என் கூறியது.


Pengarang :