RENCANA PILIHANSELANGOR

சுங்கை சிலாங்கூர், ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடு வழக்க நிலைக்குத் திரும்பியது

ஷா ஆலாம், ஜூலை 22:

சுங்கை சிலாங்கூர் 1ஆவது, 2ஆவது
மற்றும் 3ஆவது கட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்று அதிகாலை மணி 3.30க்கு வழக்க நிலைக்குத் திரும்பியதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

குடிநீர் விநியோகம் படிப்படியாக வழக்க நிலைக்குத் திரும்ப விநியோக முறையில்
குளம் மற்றும் நீர் அழுத்த அளவை மேம்படுத்தும் மற்றும் நிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக இதன் வாடிக்கையாளர் மற்றும் தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ராவோஃப் அகமது தெரிவித்தார்.

“குடிநீர் அவசியம் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் மற்றும் இடங்களைத் தவிர்த்து ஆபத்து அவசர தேவைகளுக்கு கொள்கலன் லோரிகள் அனுப்பப் பட்டதாகவும் அவர் சொன்னார்.

“இம்முறை மிகப் பெரிய அளவிலான குடிநீர் தடை ஏற்பட்டிருப்பதால் பொது மக்கள் ஓரிட சேவை மையத்தை நாடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :