SELANGOR

சுற்றுச் சூழல், பசுமை தொழில்நுட்ப நிதியுதவி திட்டம்: மாநில அரசு வெ.750,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூலை 8-

பசுமை தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச் சூழல் மானியத்திற்காக இம்மாநிலம் முழுவதிலும் 109 அமைப்புகளுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை மாநில அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தம் 55 அமைப்புகள் சுற்றுச் சூழல் உதவிநிதியைப் பெற்ற வேளையில், 54 அமைப்புகள் பசுமை தொழில்நுட்ப உதவி நிதியை பெற்றன என்று சுற்றுச் சூழல், பசுமை தொழில்நுட்பம், அறிவியல், தொழிநுட்ப புத்தாகம் மற்றும் பயனீட்டாளர் விவகார துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் தெரிவித்தார்.

இந்த சிறு நிதியுதவித் திட்டமானது சுற்றுச் சூழலைப் பேணுவதற்கும் பசுமை தொழில்நுட்ப பயனீட்டிற்காகவும் வழங்கப்படுகிறது என்றார் அவர்.
இந்த உதவி நிதியைப் பெறும் அமைப்புகள், சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும் திட்டங்களை அமல்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :